Close
நவம்பர் 21, 2024 6:00 மணி

திருச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா

உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.     காலம் காலமாக பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அவர்கள் சாதிக்க அவர்களுக்கு அளிக்க பட வேண்டிய வாய்ப்புகள் அவர்களுக்கு குடும்பத்தில் சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை உள்ளிட்ட அனைத்தும் அவர்களுக்கு எளிதாக கிடைத்ததில்லை.  ஒவ்வொரு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை அவர்கள் சந்தித்து போராடி பெற வேண்டிய நிலை தான் அன்று முதல் இன்று வரை உள்ளது.

அப்படி பல போராட்டங்களை குடும்பத்திலும் இந்த சமுதாயத்திலும் சந்தித்து அதை கடந்து இன்று உலகளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமே சாதித்து வந்த துறைகளில் இப்போது பெண்களும் சாதித்து வருகின்றனர். உதாரணமாக விமானிகளாக,  ரயில் ஓட்டுநர்களாக பேருந்து ஓட்டுநர்களாக விஞ்ஞானிகளாக விளையாட்டு வீராங்கனைகளாக,  காவல்துறை அதிகாரிகளாக,  மருத்துவர்களாக மாவட்ட ஆட்சியர்களாக, அரசியல் தலைவர்களாக ,தொழிலதிபர்களாக இப்படி பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தளத்தில் சாதனை மற்றும் சேவைகளை புரிந்து வரும் பெண்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக தூய்மை பணி செய்து வரும் மரிக்கொழுந்து மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பிரிவில் பணியாற்றும் சியாமளா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா பாய், மீன் வியாபாரம் செய்து சமூக பணியாற்றி வரும் விஜயா, தேசிய அளவில் ஓவியப் போட்டியில் விருது பெற்ற பள்ளி மாணவி கயல்விழி, பல்வேறு உலக சாதனைகளை புரிந்து வரும் பள்ளி மாணவி நிபுணா உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்று மற்றும் பிரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவர் சிவசங்கர் சேகரன், சமூக செயற்பாட்டாளர்கள் கோவிந்தசாமி, ஆர்ம்ஸ்ட்ராங் ராபி, பெட்காட் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன், தாய் நேசம் அறக்கட்டளை தலைவர் ஹப்சி சத்தியாராக்கினி ,காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாதனை புரிந்த பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் அண்ணாதுரை, அமைப்பின் பொதுச்செயலாளரும் மாவட்ட தலைவருமான  என்ஜினீயர் செந்தில்குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம், மகளிர் பிரவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணைச்சொயலாளர் அல்லிக்கொடி,   விளையாட்டு பிரிவு செயலாளரும், தடகள பயிற்சியாளருமான சுரேஷ் பாபு, இணைச் செயலாளரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான எம்.எழில் மணி வெங்கடேஷ் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top