Close
நவம்பர் 21, 2024 11:58 மணி

புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

புதுக்கோட்டை

ரெட்கிராஸ் சங்கம் சார்பில் புதுகை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாம்

புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பரசுராமன் தலைமை வகித்தார்.முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.வெற்றிவேல் தொடக்கி வைத்தார்

இந்த நிகழ்வில் ஜெ.ஜெ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுப்பிரமணியன்,, இந்தியன் ரெட் கிராஸ் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட இணைச்செயலாளர் பேரா எஸ்.விஸ்வநாதன் புதுக்கோட்டை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் தயாநிதி மற்றும் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்..

 முகாமினை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமையிலான  மருத்துவக் குழுவினர் நடத்தினர்.இந்த  முகாமில்  ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் 87 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்  இரத்ததானம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top