திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசுதா முன்னிலை வகித்து, அனைவரையும் வரவேற்றார்.
போட்டியில், புதிர் விளையாட்டு, நடித்துக் காட்டல் மற்றும் பலூன் விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி அளவில் சிறப்பாக செயல்பட்ட ஜமீன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் சிவசங்கர் அவர்களை பாராட்டி கெளரவிக்கப்பட்டது.
அதேபோல, சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோரின் பணியை பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேந்தர், ஹரிநாத், ஹேமாமாலினி, வேடியப்பன், தனலட்சுமி, ஆனந்தன், காத்தவராயன், சிறப்பு பயிற்றுநர்கள் வெங்கடேசன், சசிகுமார், பிரசாத், சுரேஷ், இயன்முறை மருத்துவர் தீபா, கணக்காளர் சசிகுமார், மைய ஆசிரியை பிரியங்கா, உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.