Close
நவம்பர் 21, 2024 9:11 மணி

நாமக்கல் அரசு கல்லூரியில் மகளிர் தின விழா, விழிப்புணர்வு மனித சங்கிலி..!

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் உரிமை குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

நாமக்கல்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முன்புறம் நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில், நாமக்கல் & மோகனூர் மெயின் ரோட்டில், மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடந்த மகளிர் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்து, பெண்கள் உரிமை பற்றியும், பெண்களுக்கான வாய்ப்பை, பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையை சேர்ந்த வித்யா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பேபி பிரிஸ்கில்லா, ஆலோசகர் மகாலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர். விழாவில், பெண்கள் பாதுகாப்பு, சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றில் இருந்து எவ்வாறு விடுபடுவது, பெண் கல்வியின் அவசியம், பெண்களுக்கான உரிமை திட்டங்கள், குழந்தை திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள், பெண்களுக்கான உதவி எண்கள் 181, 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முடிவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top