Close
நவம்பர் 22, 2024 12:00 காலை

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இலவச தையல் பயிற்சி

காட்பாடியில் உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அரிமா சங்கம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், சேவகன் டிரஸ்ட் மற்றும் தீபம் பெண்கள் கூட்டமைப்பு இணைந்து உலக மகளிர் தின விழா காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீநாராயண மண்டபத்தில் நடைபெற்றது.
சேவகன் டிரஸ்ட் இயக்குனர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையேற்று புதிய தையல் பயிற்சியினை துவக்கி வைத்து பேசினார்.
சேவைகளை பாராட்டி, உலக மகளிர் தினத்தினை போற்றியும், ரெட் கிராஸ் சொசைட்டி காட்பாடி அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பேசினார். பன்னாட்டு அரிமா சங்க 324H மாவட்ட ஆளுநர் லயன்.சி.புவனேஸ்வரி, தீபம் பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹேமலதா, செயலாளர் எம்.ஈஸ்வரி, பொருளாளர் டி.லிடியாசாந்தகுமாரி பி.சுமித்ரா உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து, பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற காட்டுப்புத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.விஸ்வநாதன், தமிழ்நாடு அறிவுப்படை இயக்குனர் அம்மையப்பன், காட்பாடி அரிமா சங்க முன்னாள் தலைவர் லயன்.என்.தங்கவேல், தலைவர் எம்.திலகர், லயன்.செல்வமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தீபம் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பூச்சரம், தோழி பெண் தொழிலாளர் நல வாரிய மற்றும் கட்டுமான நலவாரிய மகளிர் குழுவினர் பி.சுமித்ரா பி.வாசுகி, டி.சுமித்ரா, கவிதா, எமிமா, எ.கௌரி, எஸ்.ஷகிலாபி, சி.வேண்டாமணி உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் 50 பெண்கள் இலவச தையல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். விழாவில், ஐந்து தையல் மிஷின்கள் இயக்கி பயிற்சி துவக்கப்பட்டது. இறுதியாக, எம்.ஈஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top