Close
நவம்பர் 21, 2024 10:38 மணி

அரசு பள்ளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள எல்இடி தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கிய சென்னைத் துறைமுகம்

சென்னை

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான 30 எல்இடி தொலைக்காட்சி பெட்டிகளை தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் வழங்கிய சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு  சுமார் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான 30  எல்இடி தொலைக்காட்சி  பெட்டிகளை தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்  வழங்கினார்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பளளிகளில்  “டிஜிட்டல் வகுப்பறை சூழல்” திட்டத்திற்காக  எல்இடி தொலைக்காட்சி உபகரணங்கள் தேவைப்படுவதாக  பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு  உதவுமாறு பம்ப்லெப் என்ற தன்னார்வ  தொண்டு அறக்கட்டளை சென்னைத் துறைமுகத்தை அணுகியது.

இதனைப் பரிசீலனை செய்த துறைமுக நிர்வாகம்  பெருநிறுவன சமூக பொறுப் பாண்மை திட்ட நிதியின்கீழ் சுமார் ரூ. 16 லட்சம் செலவிலான சுமார் 30 எல்இடி தொலைக்காட்சி உபகரணங்களை வழங்கிட  சென்னை துறைமுகம் சார்பில்  கடந்த பிப்.19-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி கொள்முதல் செய்யப்பட்ட 30 தொலைக்காட்சி பெட்டிகளை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம்  சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார்.   இந்த  எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகள் கல்வி 40 பயன்பாடு மென்பொருள் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச தமிழ்க் கல்விப் பயன்பாட்டிற்கு இத்தொலைக்காட்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் எஸ் விஸ்வநாதன், கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணா, செயலாளர் இந்திரனில் ஹஜ்ரா, தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள்  பிரேம்குமார் கோகுலதாசன் மற்றும் துறைமுகத்தின் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top