Close
நவம்பர் 22, 2024 12:12 காலை

காலணிகளை மாலையாக அணிந்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

காலணிகளை மாலையாக அணிந்து வாக்கு சேகரித்து சுயேட்சை வேட்பாளர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் வருகிறது ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பாளர்களிடம் பெறப்பட்டது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு பெறப்பட்ட மனுக்களில் தகுதி அடிப்படையில் 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் தகுதியின் அடிப்படையில் 29 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமம், குப்புசாமி நகரைச் சேர்ந்தவா் இரா.ஜெகந்நாதன். பால் வியாபாரியான இவா், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இவருக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இவா், 10-க்கும் மேற்பட்ட காலணிகளை மாலை போல அணிந்துகொண்டு வாக்கு சேகரிக்கத் தொடங்கினாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த அரசு அலுவலா்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த இவா், தொடா்ந்து தனது இரு சக்கர வானத்தில் மாலையுடனேயே சுமாா் 2 கி.மீ.

தொலைவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். வழிநெடுகிலும் இரு சக்கர, நான்கு சக்கர, பேருந்துகளில் சென்ற பொதுமக்கள் இவரை வியப்புடன் பாா்த்தனா். பின்னா், மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், பொதுமக்கள், வணிகா்களிடம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் . இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top