Close
நவம்பர் 21, 2024 11:34 மணி

பெருகமணி- நங்கவரம் சாலையில் ரயில்வே மேம்பாலம்: வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்கு சேகரித்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவும், அதிமுக வேட்பாளராக கருப்பையாவும், பாமக வேட்பாளராக செந்தில்நாதனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜல்லிக்கட்டு ராஜேஷும் போட்டியிடுகிறார்கள் சுயேச்சைகள் 26 பேரில் முதன்மையான சுயேட்சை வேட்பாளராக திகழ்கிறார் எஸ். தாமோதரன்.

கிராமாலயா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இவர் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு நிகராக தனது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி உள்ளார். திறந்த ஜீப்பில் சென்று கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பது துண்டு பிரசுரங்கள் மூலம் வாக்காளர்களை வீடு தோறும் சென்று சந்தித்து வாக்குறுதி அளிப்பது போன்ற தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருகமணி  மற்றும் ஆரியம்பட்டி, திருப்பராய்த்துறை பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார் .அவருடன் மகளை சுய உதவி குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்களும் சென்றனர்.

பிரச்சாரத்தின் போது அவரிடம் பெருகமணி – நங்கவரம் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது .அந்த சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் விவசாய பணிகளை செய்வதற்கு வாகனங்களில் செல்ல முடிவதில்லை. ரயில் செல்லும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் அந்த  சாலையில் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட வேட்பாளர் தாமோதரன் தான் வெற்றி பெற்றால் பெருகமணி டூ நங்கவரம் சாலையை அகலப்படுத்தி தரமாக அமைத்து தருவதாகவும் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் ஆரியம்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் சாலை, குடிநீர். தெருவிளக்கு உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top