Close
ஏப்ரல் 10, 2025 12:10 காலை

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

சோழவந்தான் திரௌபதி அம்மன்கோவில் பூக்குழி திருவிழா வருகிற மே13-ஆம் தேதி முதல் ஆரம்பமாகி மே 24-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் மகாபாரதகதையில் வரக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் புரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மே 13 திங்கட்கிழமை முதல் நாள் மாலை கொடியேற்றம்,

மே 14 செவ்வாய் மாலை சக்தி கரகம்,

மே 15 புதன்கிழமை காலை 10 மணியளவில் திருக்கல்யாணம், மாலை அம்மனும் சுவாமியும் வீதிஉலா,

மே 16 வியாழக்கிழமை சர்க்கரையுககோட்டை சைத்தவன், துரோணாச்சாரி வேடம்,

மே 17 வெள்ளிக்கிழமை கருப்பட்டி கிராமத்தில் பீமன்,,கீசகன் வேடம்

மே 18 சனிக்கிழமை சோழவந்தானில் பீமன்,கீசகன் வதம்,

மே 19 ஞாயிற்றுக்கிழமை மாலை அர்ஜுனன் வேடம்,அம்மன் புறப்பாடு,அர்ஜுன் தபசு

மே 20 திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் காளிவேடம், அம்மன்புறப்பாடு,அரவான் பலி ,கருப்பு சாமி வேடம் நடு இரவு காவல் கொடுத்தல்,

மே21 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் துரோபதை வேடம், துரியோதனன் படுகளம், அம்மன் புறப்பாடு, திரௌபதை சபதம் முடித்து கூந்தல் முடிப்பு,

மே 22புதன்கிழமை மாலை 4 மணி அளவில் மந்தைகளத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அம்மன் புறப்பாடு,

மே 23வியாழக்கிழமை மாலை கொடி இறக்கம், வைகை ஆற்றில் தீர்த்தம் ஆடுதல் இரவு கோவில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி,

அதிகாலையில் அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வந்து கோவிலில் வந்து அடையும்,

மே24வெள்ளிக்கிழமை மாலை பட்டாபிஷேகம், இரவு வீரவிருந்து நடைபெறுகிறது.

இப்படி ஒவ்வொரு நாளும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. தினசரி மகாபாரத தொடர் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top