Close
நவம்பர் 21, 2024 2:38 மணி

2 தொகுதிகளில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக..! தொண்டர்கள் அதிர்ச்சி..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம் )

தமிழகத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை முப்பத்தி ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளில் பகல் 12 மணி நிலவரப்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

அதிமுக மற்றும் பாஜக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பல தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடிப்பது அதிமுக வா அல்லது பாஜகவா என்கிற போட்டி தான் இந்த இரு கட்சிகளுக்கு இடையே நடந்து வருகிறது. முழுமையான தேர்தல் முடிவு வர மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிடும் என்றாலும் தற்போதைய முன்னிலை நிலவரப்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

எனவே திமுக கூட்டணி வேட்பாளர்கள் 38 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி இருப்பது போல தெரிகிறது. விருதுநகர் தொகுதியில் மட்டும் பாஜக கூட்டணியில் தேமுதிக வேட்பாளரான விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார். அதிமுக முன்னிலை பெற்று தொகுதியில் மாறி மாறி வருவதால் யார் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

அதே நேரத்தில் கோவை உள்பட பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதையும் தாண்டி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் நான்காவது இடத்தில் அதிமுகவும் உள்ளது.

அதேபோல கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முதல் இடம் பிடித்து இருக்கும்போது பாஜக வேட்பாளர் இரண்டாவது இடத்திலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்திலும் அதிமுக நான்காவது இடத்திலும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பிரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது கட்சி தொண்டர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top