Close
அக்டோபர் 6, 2024 10:29 காலை

அலங்காநல்லூர் அருகே 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள குதிரை எடுப்பு திருவிழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வே.பெரியகுளம், பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
ஒரு சில காரணங்களுக்காக 33 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது ஐந்து கிராம பொதுமக்களும் நீதிமன்றத்தை நாடி திருவிழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றிருந்தனர்
இந்த நிலையில் 5 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் மந்தையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் 5 கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது
இதில் வருகின்ற 10ஆம் தேதி அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடத்துவதற்கான பிடிமண் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்பு ,திருவிழா நடைபெறும் இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு வழிகாட்டுதல்படி, திருவிழா நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து, கிராம முக்கியஸ்தர்கள் கூறுகையில் , மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, அலங்காநல்லூர் அருகே உள்ள, வெ. பெரியகுளம் பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி இந்த ஐந்து ஊர்களுக்கும் பொதுவான அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழாசில ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறவுள்ளது. இது கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இதற்காக இருந்த ஒரு சில தடைகளை நீதிமன்றத்தை நாடி திருவிழா நடத்துவதற்கான அனுமதிபெற்று வந்துள்ளோம். இதனைத் தொடர்ந்து திருவிழா நடத்துவதற்கு அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரையிடம், திருவிழா நடத்த மனு அளித்ததை தொடர்ந்து, தக்கார் நியமனம் செய்து விழா நடத்த உத்தரவிட்டார்.
அதற்காக இணை ஆணையர் உள்ளிட்ட அறநிலைய துறை அதிகாரிகளுக்கு, கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன்படி, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தக்கார் இளமதி, திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை, செய்து வருகிறார். கோவில் பூசாரியாக பாறைப்பட்டி தவமணி என்பவரை நியமனம்
செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
வருகின்ற 10 7 2024 புதன்கிழமை காலை 7 மணிக்கு அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழாவிற்கான, மண் எடுத்து வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது, இதற்காக 5 கிராமங்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன்பிறகு திருவிழா நடத்துவதற்கான தேதி, முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top