Close
நவம்பர் 22, 2024 5:56 காலை

அருப்புக் கோட்டை அருகே குறிஞ்சா குளத்தில் வேளாண் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்பீச் ரிலையன்ஸ் பவுண்டேசன், மற்றும் தேனி மாவட்டம், விடியல் ஆகிய நிறுவனங்கள் சார்பில்
மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சா குளத்தில் நடைபெற்றது. பரிசோதனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகே, குறிஞ்சா குலத்தில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் ஸ்பீச் விடியல் நிறுவனத்தின் சார்பாக சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பான தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ரிலையன்ஸ் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா ஸ்ரீ கிருபா தலைமையை வகித்தார் . ஸ்பீச் நிறுவனத்தில் இயக்குனர் செல்வம் முன்னிலை வைத்தார் .
திட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சை வரவேற்று பேசினார். தேனி மாவட்டம், விடியல் நிறுவனத்தின் நிறுவனர் காமராஜ், அருப்புக்கோட்டை வேளாண் வல்லுநர் சந்திரசேகரன், விடியல் இயக்குனர் வினோ பாலாஜி திட்டம் மேற்பார்வளர் காசிராஜ், திட்ட மேற்பார்வையாளர் முத்துச்செல்வி, திட்டம் மேற்பார்வையாளர் குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மண் பரிசோதனை நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தின் மூலமாக விவசாயிகளிடம் மண் மாதிரி எடுக்கப்பட்டது மண்ணை பரிசோதனை செய்து மண்ணின் உடைய தளச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து கரிம சத்து குறித்து பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு விவசாயிகளுக்கு,உரம் விடுதலை குறித்து, பரிந்துரை செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top