Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

மீன் சிலையை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மதுரையின் அடையாளமான பாண்டிய மன்னனின் இரட்டை மீன் சின்னம் பெரியார் ரயில் நிலைய முன்பகுதியில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை விரிவாக்க பணிக்காக ரயில்வே நிர்வாகம் அகற்றியது. அந்த மீன் சிலையை உடனடியாக நிறுவ வேண்டும் எனக் கோரி, கோஷமிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முற்றுகையிட்டனர். தொடர்ந்து, பாண்டிய மன்னர் வேடம் அணிந்து வந்தார்.
இதில் , தமிழர் கட்சி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு, கோரிக்கை தொடர்பான மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.
வழக்கறிஞர் தீரன் திருமுருகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக, அங்கிருந்த இரட்டை மீன் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், இரயில்வே பணிகள்
முடிந்த பிறகு மீன் சிலை வைக்கப்படவில்லை.

இது குறித்து, எங்கள் கட்சியின் சார்பில், மாவட்ட ஆட்சியர் உட்பட பலருக்கும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாத காரணத்தால், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கின் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்றம் மீன் சிலையை மீணடும் பழைய இடத்திலேயே நிறுவிடக்கோரி, இரு முறை உத்தரவிட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை வலியுறுத்தி எங்கள் கட்சியின் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியும் எந்தப் பலனுமில்லை. எனவே, எங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் மதுரை உயர்நீதிமனற உத்தரவை நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை விடுத்து, தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். உடனடியாக பாண்டிய மன்னரின் அடையாளச் சின்னமான இரட்டை மீன் சிலையை அதே இடத்தில் நிறுவிட வேண்டும்.
இதே நிலை நீடித்தால், சிறை அடைப்பு போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top