Close
நவம்பர் 22, 2024 3:39 காலை

திருச்சி- திருப்பூருக்கு எலெக்ட்ரிக் பஸ்..! குளு..குளு பேருந்து..!

Nuego பேருந்து சேவை (கோப்பு படம்)

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Nuego என்கிற நிறுவனம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பேருந்துகளை குறைவான கட்டணத்தில் இயக்கி வருகிறார்கள். தற்பொழுது திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7.20 க்கு புறப்பட்டு, புஷ்பா தியேட்டர் 7.25 மற்றும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் 7.30 ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் 10.25, தில்லை நகர் 10.30, மத்திய பேருந்து நிலையம் 10.35, திருச்சி விமான நிலையம் 10.50 மணிக்கு சென்றடைகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு 9.40 மணி அளவில் மேல் சொன்ன அதே வழியில் வந்தடைகிறது.

டிக்கெட் கட்டணம் தேர்ந்தெடுக்கும் இருக்கையை பொறுத்து ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரை நிர்ணயத்துள்ளார்கள். அவர்களுடைய வெப்சைட்டில் நேரடியாக புக் செய்யும் பொழுது 100 ரூபாய் வரை டிக்கெட் தள்ளுபடி வழக்குகிறார்கள். Redbus, make my trip போன்ற இணையதளத்திலும் டிக்கெட் புக்கிங் ஏற்றுக்கொள்கிறார்கள்.

சுற்றுப்புற சூழலை மேம்படுத்திடுவதில் தற்போது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த பூமிக்கு நம்மை கைவிட்டுவிடும் என்ற அச்சம் மனிதனுக்கு வந்துவிட்டது.

பூமிக்கு எதிரான மனித செயல்பாடுகளின் விளைவுகளை மனிதன் அவ்வப்போது அனுபவித்தது வருகிறான். அதனால் கொஞ்சம் விழிப்பு வந்து பசுமைக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.அந்த வகையில் வந்ததுதான் மின் வாகனங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top