தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தம் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (83) இன்று காலமானார்.
முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் 26.9.2024 (வியாழக்கிழமை) அதிகாலை காலமானார்.
அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன். மேலும் அவருடைய உடலும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.
முன்னதாக மறைந்த இராம.திரு. சம்பந்தம் உடலும் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.