தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி ஓட்டல் அஜந்தாவில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி தலைமை தாங்கினார். சங்கத்தின் நிறுவனர் ஜி.கே.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு முன்னிலை வைகித்தார்.சங்கத் துணைச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார்.
சங்கத்தின் செயலாளர் பழனியாபிள்ளை செயலறிக்கையை வாசித்தார். நிறுவனர் ஜி. கே. ஸ்டாலின் சங்கத்தின் சட்ட திட்டங்கள் பற்றியும் விதிமுறைகள் பற்றியும் விளக்கவுரை யாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர் மறைந்த பெருமாள் (பாவூர்சத்திரம்) மற்றும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு உறுப்பினர்களாகப் பதவி வகித்துவந்த அலி அகமது (விழுப்புரம் ) கோ. பாண்டியன், (வேலூர்), ஏ.சி. புருஷோத்தமன் (வேலூர் ), ஹரி ராமமூர்த்தி( தேனி) ஆகிய நான்கு பேர் உடல்நிலை காரணமாகத் தாமாக முன்வந்து தமது செயற்குழு பதவியிலிருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக சொக்கலிங்கம் (கரூர் ). ,ஜி .முருகேசன் (திருநெல்வேலி), எஸ். ராஜேந்திரன் (கோவை), ஆர். பொன்சாமி (திருச்சி) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய நால்வரில் ஒருவரான ஏ சி. புருஷோத்தமன் உடல்நிலை காரணமாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், தான் வகித்து வந்த துணைச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். மற்ற மூவரும் சங்க உறுப்பினர்களாக நீடிக்கின்றனர்.
ஏ.சி. புருஷோத்தமன் வகித்து வந்த துணைச் செயலாளர் பதவி கோவையைச் சேர்ந்த மோகன் கனக குமாருக்கு வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு (2025- பிப்ரவரி மாதம்) சென்னையில் நடைபெறவிருக்கிற நமது சங்கத்தின் மூன்றாம் ஆண்டுத் துவக்க விழா விளம்பர மலரை வெளியிட மாண்புமிகு முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்களை அழைப்பது.
ஆண்டுதோறும் பொதுக்குழுக் கூட்டத்தின் போது செலவினத்தை ஈடுகட்ட ஒவ்வொரு உறுப்பினரும் ரூபாய் 1000/- நன்கொடையாக சங்கத்திற்கு வழங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் 2023 – 2024 -ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு கணக்கு (ஆடிட்டிங் ரிப்போர்ட்) பொதுக்குழுவில் பொருளாளர் ஞானக்குமாரால் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
வயநாடு நிலச்சரிவு அசம்பாவித்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு மோகன் கனக குமாரின் ஆலோசனைப்படி முதல் கட்டமாக சங்க உறுப்பினர்கள் சிலர் தாமாக முன்வந்து ரூ. 6300 வழங்கினர்.
சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி வெளியிடப்படவிருக்கும் ஆண்டு மலருக்கு குறைந்தபட்சம் 70 முழுப் பக்க விளம்பரங்களை சேகரிக்க வேண்டுமென்று உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனையொட்டி உறுப்பினர்களுக்கு அச்சடிக்கப்பட்ட விளம்பர டாரிஃப் பிரதிகள் போதுமான அளவுக்கு வழங்கப்பட்டன.
ஆண்டு மலர் தொடர்பான விளக்கத்தையும் அதில் இடம்பெறவிருக்கும் பொதுவான அம்சங்கள் பற்றியும் துணைத்தலைவரும் மலர் குழுக் தலைவருமான துரை கருணாநிதி உறுப்பினரிடையே எடுத்துரைத்தார்.
கடந்த வாரம் செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிக்கையாளர் நல நிதி திட்டத்தின் கீழ் ஆறு பத்திரிகையாளர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவியை நேரில் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக நிகழ்ச்சியின் முடிவில் செயற்குழு உறுப்பினர் நெல்லை நெல்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.