Close
அக்டோபர் 6, 2024 4:31 காலை

உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டிதது ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், கட்டுமான தொழிலாளர்கள், கட்டிட பொறியாளர்களும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டுமான பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள குவாரிகள் மற்றும் கிரஷர்களில் தலா ஆயிரம் ரூபாய் விலை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வைக் கண்டித்து, கடந்த 1ஆம் தேதி முதல் இன்று நான்காவது நாளாக டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தியும், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், இன்று உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான உசிலம்பட்டி பகுதியில் காக்கா எனும் மலை பாதுகாப்பு அமைப்பின் விதிமுறைகளால் வீடுகள் கட்டுவதற்கும், வீட்டுமனைகள் வாங்க முடியாது கிராம மக்கள் அவதியுற்று வருவதாகவும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கிராமப்புற மக்களின் வீடு கட்டும் கனவுகள் தடைபடும் நிலை உருவாகி உள்ளதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், காக்கா அமைப்பின் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top