Close
அக்டோபர் 5, 2024 10:46 மணி

திருச்சியில் திருநாவுக்கரசர் பங்கேற்ற காங்கிரசாரின் பாதயாத்திரை

திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்ற திருநாவுக்கரசர்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள்  மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சனம் செய்து வருவதை கண்டித்தும், பாஜகவின் மதவாத செயல்பாடுகளை கண்டித்தும், நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களிலும் மகாத்மா காந்தி பாதயாத்திரை  என்ற பெயரில் நடைபயண யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும்  மாநில தலைவர் செல்வபெருந்தகை உத்தரவிற்கு இணங்க தமிழகம் முழுவதும் காங்கிரசார் நடைபயண பாதயாத்திரை நடத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபயண யாத்திரை நடைபெற்றது.  இந்த யாத்திரையில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும் ,முன்னாள் எம் பி  யுமான திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த பாதயாத்திரையானது  உறையூர் குறத்தெரு முதல் மாகாத்மா காந்தி அஸ்தி மண்டபம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் காந்தி அஸ்தி மண்டபத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர் .

இந்த யாத்திரையில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணிராஜ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாநில தலைவர் மகேஸ்வரன், தெற்கு மாவட்டத் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், வக்கீல் சந்திரன், மாவட்ட பொருளாளர் முரளி, கவுன்சிலர் சோபியா விமலா ராணி, மாவட்ட நிர்வாகிகள் பூக்கடை பன்னீர், பொன்னன், சேக் தாவுத், கருப்பையா, பாலு, ஜான் பிரிட்டோ, ராஜாமணி, ஜெனிபர், பாலமுருகன்,நாச்சிக்குறிச்சி அருண், முகமது ஹக்கீம், அன்பு ஆறுமுகம், நதீம், மலைக்கோட்டை சேகர், செந்தமிழ் செல்வன் கோட்டத் தலைவர்கள் தில்லைநகர் கிருஷ்ணா, புத்தூர் மலர் வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல், அரியாமங்கலம்  அழகர்,  திருவானைக்காவல் தர்மேஷ், பொன்மலை பாலு, தாராநல்லூர் முரளி, அஞ்சு, மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செளஸ், கலியமூர்த்தி, இலக்கிய அணி பத்மநாபன், மாணவர் காங்கிரஸ் தலைவர் வி.பி.நரேன், ஐடி விங்  விஜய் படேல், அரிசி கடை டேவிட், கிளமெண்ட்,. ரவிச்சந்திரன், வீரமணி, ஹரிஹரன், அருள், ஜோன்ஸ், அஸ்லாம், கோகிலா, பெல்ட் சரவணன், கண்ணன், அண்ணாதுரை, ஆரிப், பாண்டியன், நடராஜன், லட்சிமியம்மா, தனம், கலியபெருமாள்,குரு தியாகு, மூர்த்தி, கூத்தாபர் சம்பத், ஒளி முகமது, சண்முகம், சுப்புராஜ் ,மணி, சின்ன கண்ணு, கோபி ஆனந்த் ,சோனா ராமநாதன், தியாகிராஜா, ரங்கநாதன் கல்யாணி, பழனியம்மாள், மல்லி, சரசு, விஜய் பக்தன், பாதயாத்திரை நடராஜன்,  ரவி, சிஏ சின்னதுரை, ராஜசேகரன், ஸ்ரீ பெரியநாயகம், சக்திவேல், செல்வகுமார் பரமசிவம் முகமது ரஃபிக், மார்ட்டின் உட்பட 350 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர். நடைபயண இறுதியில் தலைவர்கள் சிறப்புரையாற்றனர்.

இன்று நடைபெற்ற யாத்திரையானது திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்து முடிந்துள்ளது. நடைபயணயாத்திரை சென்ற சாலைகளில் இருபுறமும் காங்கிரஸ் கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தன. பாதயாத்திரையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 9ம் தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்களின் பாதயாத்திரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top