ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் முன்னோர்கள். அது பொய்யில்லை. ஆடையே ஒரு மனிதனின் தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
நாம் எல்லோருமே ஆடைகளை எடுத்திருக்கிறோம். அதுவும் பெண்களை துணிக்கடைகளுக்கு அழைத்துச் சென்றால் ஒரு முழு நாளும் துணிக் கடையிலேயே கழிந்துவிடும். ஆண்கள் என்றால் இரண்டு மாடலை பார்த்தால் அதில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிவிடுவார்கள்.பெண்கள் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.
ஆடையை இப்படி வைத்தும் அப்படி வைத்தும் பார்த்து எடுப்பதற்குள்..அப்பப்பா.. வேணாம்பா..நீங்களே இனிமேல் துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்று தள்ளிவிடும் நிலை வந்துவிடும்.
உண்மை என்னவென்றால் துணி எடுப்பது ஒரு கலை. ஆளுக்கு ஏற்ப, நிறத்திற்கு ஏற்ப ஒரு ஆடையை பொருத்தமாக எடுப்பது ஒரு தனிக்கலை.
சில பேர் விலை குறைவான ஆடைகளை மட்டுமே வாங்குவார்கள். அது அவர்களை மிடுக்காகவும் உயர் ரக ஆடைபோலவும் காட்டும். காரணம் அவர்கள் அவர்களின் நிறம் மற்றும் தோற்றத்திற்கு ஏற்ப தேர்வு செய்வதே காரணம்.
இப்படியாக நாம் ஆடைகள் வாங்கும் போது நமது அளவு என்ன என்பது குறித்த கேள்வியும் எல்லோருக்குமே எழும். அவ்வாறு அளவுகளை தேர்வு செய்யும் போது ஆடைகளில் XL, XXL என்று எல்லாம் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
அதில் L, S என்ற எழுத்துகளில் L என்பது லார்ஜ், S என்பதற்கு ஸ்மால் என்று அர்த்தம். இது பலருக்கும் தெரிந்ததாக இருக்கும். ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?
ஆடைகளின் அளவுகளில் குறிப்பிடப்படும் ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பதன் சுருக்கமாகவே குறிப்பிடப்படுகின்றது.
XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையுமே சுருக்கமான முறையில் குறிப்பிடுகின்றது.
பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை காணப்படுகிறது.
இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலம் முதல் 46 அங்குலம் வரை காணப்படுகிறது.
இதே போன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் சுருக்கமாக குறிக்கின்றது.
ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமான ஆடைகளில் உலகளாவிய ரீதியில் இந்த குயியீடு தான் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி வருகிறது. நீங்கள் ஆடைகளை வாங்குவதற்கு தயாராகி வருவீர்கள். அதனால் இப்போது அளவுகளை அறிந்துகொண்டு வாங்கி மகிழுங்கள்.