Close
நவம்பர் 1, 2024 8:36 மணி

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் : முதலமைச்சர் நியமனம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று போன்ற அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளவும் சில அமைச்சர்களுக்கு சில மாவட்டங்களை ஒதுக்கி அந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கோவைக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top