90 தொகுதிகளைக் கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்த 90 தொகுதிகளுக்கும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தனியாகவும் போட்டியிட்டன.
மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் 63.45சஹாவீத வாக்குகள் பதிவாகின. இன்று (8ம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா பத்கம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த இரண்டிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குமான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜம்மு காஷ்மீரில், இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகள், காங்கிரஸ் 6 தொகுதிகள், சி.பி.எம். 1 தொகுதி என வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க. 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில் மிக முக்கியமாக ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 7 இடத்திலும், இதர கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.