Close
நவம்பர் 1, 2024 9:25 மணி

புதுகை கம்பன் கழகத்தலைவர் 51 பவுன் தங்கச் சங்கிலி அன்பளிப்பு…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாநகராட்சி முதல் கூட்ட தொடக்க விழாவில் மேயருக்கு செங்கோல் அளிக்கும் அமைச்சர்கள் கே.என். நேரு. எஸ். ரகுபதி . உடன் ஆட்சியர் அருணா, எம்எல்ஏ. முத்துராஜா உள்ளிட்டோர்.

புதிதாக உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் கூட்டத் தொடக்க விழா( 9-10-2024) புதன்கிழமை நடைபெற்றது.

அமைச்சர்கள்  கே என் நேரு, எஸ். ரகுபதி  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாநகர மேயர்  திலகவதி செந்திலுக்கு வெள்ளிச் செங்கோலை அமைச்சர் கே.என். நேரு  வழங்கினார்.மாநகர மேயருக்குக்
கழுத்தில் அணிவிக்கப்படும் தங்கச் சங்கிலியை மாவட்ட ஆட்சியர்  அருணா  அணிவித்தார்.

மேயர் கழுத்தில் அணியும்சங்கிலி.. கம்பன் கழகத்தலைவர் அன்பளிப்பு…

51 பவுன் எடை கொண்டஇந்தத் தங்கச் சங்கிலியை புதுக்கோட்டை
கம்பன் கழகத் தலைவர்,தொழில் அதிபர்,திருப்பணிச் செம்மல்
எஸ். ராமச்சந்திரன் (S.R) செய்துநன்கொடையாக வழங்கி இருந்தார்கள்.

இந்த நற்செயலை விழா மேடையிலேயே சட்டத்துறை அமைச்சர்  எஸ் ரகுபதி பாராட்டி நன்றி தெரிவித்தார். வந்திருந்த பொதுமக்கள் பலரும்
எஸ்.ஆர். அவர்களின் உயர்ந்த கொடை  உள்ளத்தைப் பாராட்டி பேசினர்.

காலாகாலத்திற்கு மேயருக்கு அணிவிக்கப்படும்இந்த 51 பவுன் தங்கச் சங்கிலியை புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் அன்பளிப்பாக வழங்கினார் என்பது மாநகராட்சி  வரலாற்றில்  பெருமைக்குரிய  நிகழ்வு என்றார் கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top