ஒரு இளைஞனின் குடலில் இருந்து 3 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சியை வெறும் 10 நிமிடங்களில் பிரித்தெடுக்கும் மேம்பட்ட எண்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி, நகர மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஒரு உயிரைக் காப்பாற்றியது.
புதுடில்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சாலையோர உணவகம் ஒன்றில் உணவு அருந்தி உள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 3 நாட்கள் வலியுடன் சமாளித்த அவர் வேறு வழி இல்லாமல் வசந்த் குன்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர் ஷுபம் வாத்ஸ்யா தலைமையிலான குழு, பத்து நிமிட எண்டோஸ்கோபி மூலம் பூச்சியை அகற்றியது. நோயாளியின் சிறுகுடலில் இருந்த 3 சென்டிமீட்டர் அளவுள்ள கரப்பான் பூச்சி எண்டோஸ்கோபிக் செயல்முறை மூலம் அகற்றப்பட்டது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: நோயாளி உணவு உண்ணும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது அவர் தூங்கும் போது நோயாளியின் வாயில் பூச்சி நுழைந்திருக்கலாம்.
சிறுகுடலில் உயிருள்ள கரப்பான் பூச்சி உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாகும், எனவே நாங்கள் உடனடியாக எண்டோஸ்கோபி செயல்முறை மூலம் கரப்பான் பூச்சியை அகற்றினோம். கரப்பான் பூச்சி இறந்திருந்தால், அது சிதைந்து தொற்று நோய்களுக்கு வழிவகுத்து, நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்று கூறினர்.