Close
நவம்பர் 1, 2024 6:32 மணி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் விழா..!

தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் அருள்பாலித்த சுப்ரமண்ய சுவாமி

புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா நிறைவு நாளான அம்பு எய்தல் விழா பசுமலை மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவினை முன்னிட்டு, தினமும் கோவர்த்தனாம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம், சிவபூஜை, அர்த்தநாரீஸ்வரர், மகிஷாசுர வர்த்தினி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமி பசுமலையில், அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர்,
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன், எழுந்தருளினார்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து பசுமலை மண்டபத்திற்கு புறப்பாடானார்.
வழிநெடுகிலும் மண்டப திருக்கண்ணில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

எட்டுத்திக்கும் பலி கொடுக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது .
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புரட்டாசி மாதத்தில் வர்ண பகவானை வரவழைக்க எட்டு திசையிலும் அம்பு ஏவப்படும். மேலும், விவசாயம் செழிக்கவும் மக்கள் நோயின்றி வாழவும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

.விழாவிற்கான ஏற்பாடுகளை, பசுமலை மண்டபப் பொறுப்பாளர் அழகு மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top