Close
நவம்பர் 1, 2024 2:30 மணி

ரயில்வேயில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

ரயில் புக்கிங்

ரயில் டிக்கெட் புக்கிங் வழிகாட்டி

ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஓய்வு பெற்ற பணியாளர்களைக் கொண்டு 25,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வேதுறையில், ஓய்வு பெற்ற பணியாளர்களை பணியமர்த்த, முடிவு செய்துள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, தற்போது 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை இன்று தொடங்கிவிட்டது. இது குறித்து ரயில்வே வாரியம் தெரிவித்ததாவது:

முதற்கட்டமாக, சூப்பரவைசர் முதல் டிராக்மேன் வரை நிரப்ப முடிவு செய்துள்ளோம்.

65 வயதுக்கு உட்பட்ட, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவர். சாத்திய கூறுகள் இருந்தால் அதற்கு மேலும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மண்டல ரயில்வேயின் பொது மேலாளர்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து மருத்துவ தகுதி மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, அவர் கடைசியாக மாத வருமானம் என்ன வாங்கினாரோ அதற்கு சமமான தொகை வழங்கப்படும். டி.ஏ., உண்டு. மற்ற கூடுதல் சலுகைகள், ஊதிய உயர்வு கிடைக்காது.

பணியமர்த்தப்படும் பணியாளர்கள், கடந்த 5 ஆண்டுகளில் நன்மதிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் மீது எந்த குற்றநடவடிக்கை வழக்குகள் இருக்க கூடாது.

வடக்கு-மேற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top