கூகுளில் தற்போது மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பை அலங்கரித்துள்ளார். சென்னை ஐஐடியில் பயின்று இன்று கூகுளை கலக்கி வரும் அந்த நபரின் பெயர் பிரபாகர் ராகவன்.
உலகின் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது இந்தியர்கள்தான். கூகுளின் சுந்தர் பிச்சை தொடங்கி பல நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை பதவியில் உள்ளனர். கூகுளில் தற்போது மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பை அலங்கரித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் பயின்று இன்று கூகுளை கலக்கி வரும் அந்த நபரின் பெயர் பிரபாகர் ராகவன். கூகுளின் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபாகர் ராகவன், அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
யாகூவின் முன்னாள் ஊழியரான 64 வயதாகும் பிரபாகர் 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைத்தார். போபாலில் பள்ளிப்படிப்பை முடித்த பிரபாகர், சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இஞ்சினீரிங் படிப்பை முடித்தார். தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்தார்.
முதலில் தனது பணியை ஐபிஎம்-யில் பிரபாகர் ராகவன் தொடங்கினார். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் தற்போது முழுவீச்சாக கூகுள் செயலாற்றி வரும் நிலையில் அதன் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். பிரபாகரின் தலைமையின் கீழ் ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகளை கூகுள் படைக்கும் என கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஓபன் ஏ.ஐ., மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கடும் போட்டியை கொடுத்து வரும் நிலையில் பிரபாகர் ராகவன் கூகுளிக்கு புத்துயிர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.