Close
நவம்பர் 21, 2024 10:56 மணி

என்னது..அக்டோபர் மாசம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இவ்ளோ லட்சம் கோடியா..?

டிஜிட்டல் பண பரிவர்த்தனை -கோப்பு படம்

இந்தியாவில் இப்போதெல்லாம் யாரும் பாக்கெட்டில் பணம் வைத்துக்கொள்வது மிக மிக குறைவு. பேருந்து பயணம் போன்ற சில தேவைகளுக்கு மட்டுமே பாக்கெட்டில் பணம் வைத்துக்கொள்கிறார்கள்.

காய்கறி வாங்குவது முதல் டீ குடிப்பது வரை மிகச் சாதாரணமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை வந்துவிட்டது. அந்தவகையில் கடந்த ஆக்டொபர் மாதம் நாட்டில் எவ்வளவு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

யுபிஐ மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். மொத்தமாக கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தைவிட இது 10 சதவீதமும், பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 14 சதவீதமும் அதிகம் ஆகும். கடந்த அக்டோபரில் நாளொன்றுக்கு சராசரியாக 53.5 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.75,801 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் 50 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,800 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது.

நாட்டின் அன்றாட பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தியது.

தற்போது நாடு முழுவதும் பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top