Close
நவம்பர் 15, 2024 7:15 காலை

உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்..? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது..!

உட்கார்ந்தே வேலைசெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் -கோப்பு படம்

அலுவலகங்களில் வேலை செய்யும் பலருக்கு எந்நேரமும் உட்கார்ந்தே இருக்கேவேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் புதிய கலாசாரம் வந்துவிட்டது. அதனால் வேலையும் அதிகம் செய்யமுடிவதாக நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதனால் பெருகி வரும் இந்த உட்கார்ந்த நிலையிலான வேலையில் நமது உடல் இயக்கங்கள் செயல்படாமல் இருக்கின்றன. நாற்காலி அல்லது சோபாவில் உட்கார்ந்து வேலை பார்த்தபடியே இருக்கிறோம். இதனால் உடல் இயக்கங்கள் பெரிய அளவில் குறைகின்றன.

ஆனால் இங்கிருந்துதான் எதிர்பார்க்க முடியாத பல பிரச்சனைகள் உருவாகின்றன. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல நோய்களை வரவழைக்கும் கூடாரமாக இருக்கிறது. அது நம்மையறியாமல் மெதுவாகக் கொல்லும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், தசை பலவீனம், முதுகெலும்பு அழுத்தம், மோசமான ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை ஏற்படுவதுடன் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் முதுகு, இடுப்பு, மற்றும் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும்.

முதுமையை விரைவாக்கும்

இந்த ஆண்டு(2024)பிப்ரவரியில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒன்பதரை மணி நேரத்திற்கும் குறைவாக உட்கார்ந்து வேலை செய்பவர்களை விட, ஒரு நாளில் பதினொரு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் 57சதவீதம் அதிகம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு உடல் செயல்பாட்டுடன் வைத்திருப்பதற்கான வழிகாட்டுதல்படி, பெரியவர்கள் 150 நிமிடங்களுக்குக் குறையாமல், மிதமானது முதல் தீவிர உடல் பயிற்சி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை பெரியவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு 30 நிமிட உடற்பயிற்சியால், மீதமுள்ள 23 மணி நேரம் 30 நிமிட செயல்களிலிருந்து உடலை சமநிலைப்படுத்திவிட முடியாது என்று ஹூஸ்டன் பல்கலைக்கழக, உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் பேராசிரியர் மார்க் ஹாமில்டன் கூறுகிறார். மனித உடல் நாள் முழுவதும் நகர்ந்து செயல்படும்படியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வெறுமனே சும்மா உட்கார்ந்தே இருப்பதற்காக இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

எழுந்து நடமாட நேரத்தை ஒதுக்கவேண்டும் :

ஒரு நாளின் தொடக்கத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். இது நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிமையான பயிற்சியாகக் கூட இருக்கலாம். பயிற்சியை கொஞ்சம் அதிகப்படுத்த விரும்பினால் ட்ரெக்கிங் செல்லலாம்.

நின்று பணியாற்றும் மேசை :

நாள் முழுவதும் நாற்காலி அல்லது சோபாவில் உட்கார்ந்து இருப்பதற்குப் பதிலாக, வேலை செய்யும் இடத்தில் நின்றுகொண்டு வேலைசெய்யும் மேசையை பயன்படுத்தலாம். நின்றுகொண்டு வேலைசெய்யும் மேசை, ஒருவரின் அதிக நகர்வையும், அதிக ஆற்றல் எரிப்பதையும் உறுதி செய்கிறது.

சைவில் இருத்தல் :

நாம் வேலை செய்யும் போது அல்லது கூட்டத்தில் பேசும்போது கூட, சுற்றி நடப்பது அல்லது கால்களை அசைப்பது அல்லது கால்களை வளைப்பது போன்ற செயல்பாடுகளை செய்வதற்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் நமது உடல் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கால் மற்றும் முதுகுத்தண்டின் நிலைகளை சரிசெய்வது அல்லது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உட்கார்ந்தபடியும் நின்று கொண்டும் வேலை செய்வது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top