Close
நவம்பர் 14, 2024 4:40 மணி

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப்பணிக்கான தேர்வு துவக்கம்: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர், கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிக்கான போட்டித்தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று 9ம் தேதி காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை ஓ.எம்.ஆர் விடைத்தாள் மூலம் நடைபெறும்

நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.ஜி.பி இன்டர்நேசனல் பள்ளி மற்றும் பி.ஜி.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் இன்று இந்த தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சரவணக்குமார், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த தேர்வை 887 தேர்வர்கள், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை ஓ.எம்.ஆர் விடைத்தாள் மூலம் 310 தேர்வர்கள் என மொத்தம் 1,197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கென 4 தேர்வு மைங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வினை கண்காணிக்க 4 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1 நடமாடும் குழு ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வை 580 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகைபுரியவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top