Close
நவம்பர் 21, 2024 6:50 மணி

சர்ச்சை பேச்சுக்கு போலீஸ் சம்மன் : தலைமறைவான நடிகை கஸ்தூரி..!

நடிகை கஸ்தூரி

சமீபத்தில் நடிகை கஸ்தூரி பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்கச் சென்றபோது அவரது வீடு பூட்டபப்ட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

நடிகை கஸ்தூரி பேசும்போது , “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவின் அந்தப்புரத்தில் இருந்த மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழரினம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் உள்ளார்கள் ? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று யாரும் கட்சிக்கு பெயர் வைக்க முடியவில்லை” என்ற ரீதியில் கருத்து கூறியிருந்தார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெலுங்கர்களை கஸ்தூரி இழிவுப்படுத்தியதாக சர்ச்சைக் கிளம்பியது. இதையடுத்து மறுநாளே பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கோரினார்.

இருப்பினும் நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வழங்கப்பட்டன. அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரையடுத்து நடிகை கஸ்தூரி மீது இருபிரிவினர் இடையே கலகத்தை தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து நடிகை கஸ்தூரியை விசாரணைக்கு அலைபபதற்காக சம்மன் வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டபப்ட்டு இருந்தது.

பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் சம்மனை வீட்டின் சுவரில் ஒட்டிவிட்டு வந்தனர். மேலும் நடிகை கஸ்தூரி போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தலைமைறவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top