ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரக்கோணம் கூட்டு சாலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையின் நடுவே அடையாளம் தெரியாத வாகனம் நடுரோட்டில் பெரிய பெரிய கற்களை கொட்டிவிட்டு சென்றுள்ளன.
இதனால் சாலை நடுவே மலை போல கற்கள் குவிந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்கள் மிகவும் சிரமத்தோடு வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.
மேலும் இன்னும் சற்று நேரத்தில் பகல் வெளிச்சம் குறைந்து இருள் சூழத் தொடங்கும் இந்த சூழலில் வாகனங்கள் நடுவில் கொட்டப்பட்டுள்ள கற்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகி உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சாலையின் நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.