Close
நவம்பர் 23, 2024 8:24 காலை

மோடிக்கு Demonetizationக்கு பதிலாக மாற்று இருந்ததா?

பண மதிப்பீட்டு இழப்பால் ஏற்பட்ட நல்ல விளைவுகள் - பிரதமர் மோடி -கோப்பு படம்

மோடிக்கு Demonetizationக்கு பதிலாக மாற்று வழி இருந்ததா என்றால் இருந்தது, அது பாகிஸ்தான் மீது போர்தொடுப்பது தான்.

இன்று Demonetization அல்லது பண மதிப்பிழப்பு என்பதும், GST வரியும் இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்னு சொன்ன மேதாவிங்க இருக்கட்டும், அவங்க சொல்றதே ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகளை திருப்பி நாம் அவர்களிடம் கேட்காத போது 420ல் பல முறை உள்ளே போனவனெல்லாம் பொருளாதாரம் பற்றி ஊருக்கு உபதேசம் செய்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.. காரணம் நம் அறியாமையே?

முதலில் Demonetization பற்றி பார்ப்போம். ஒரு நாட்டின் பொருளாதார விருத்திக்கு முக்கிய காரணம் மக்களிடையே பணம் பரிமாற வேண்டும். அப்போது மக்களுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, அதன் மூலம் அரசுக்கு வரியாகவும் அதில் பணம் வரும்.

அதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சவும், கஞ்சா விக்கவும் ஒரு அரசு அனுமதிக்க முடியாதல்லவா? ஏனெனில் அது மக்களின் நலத்தை கெடுத்து, நாட்டில் அமைதியின்மையை புகுத்தி விடும், சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் அல்லவா?

சரி, விஷயத்திற்கு வருவோம்….

பணப்புழக்கம் அதிகரிக்க தொழில்கள் பெருகி, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது இல்லாமல் வேறு வழி என்பது, அரசே ரூபாய் நோட்டுக்களை அதிகமாக அச்சடித்து  புழக்கத்தில் விடவேண்டும். அப்போது பண புழக்கம் அதிகமாகும்.

அந்த இரண்டாவது விஷயம் தான் இந்தியாவில் நடந்தது. எப்படி? ஒன்று, 2004 ஆட்சியின் போது கிழிந்த நோட்டுக்களை மீண்டும் அச்சடித்து கொள்ளலாம் என்ற அரசு முடிவை தவறாக பயன்படுத்தி புழக்கத்தில் இருக்கின்ற நோட்டுக்களையே UPA  காங்கிரஸ் அரசு  அச்சடித்தது, அது ஒரு பெரிய தவறு.

இரண்டாவது மிகப்பெரிய தவறாக, நாசிக்கில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரங்கள் பழையது ஆகிவிட்டது என்று அதை பாதுகாப்பாக அழிக்காமல், அதை (₹1000,₹500 நோட்டுக்களை அடிக்கும் இயந்திரம்) ஏலத்தில் விட்டது. அந்த ஏலத்தை பாகிஸ்தான் அரபு நாடுகள் மூலம் எடுத்து, இந்திய ரூபாய்களை இலவசமாக, அதன் இஷ்டத்திற்கு அச்சடித்தது. அதாவது நமது எதிரிக்கு நம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் கிடைத்தால் என்னவாகும்?

அவர்கள் பிரிண்ட் செய்து தீவிரவாதிகளுக்கு நம் பணத்தையே கொடுத்து ₹500, ₹1000 நோட்டுக்களை புழக்கதில் விட்டனர்.  அப்படி நடக்கும் போது  எல்லோரிடம் ₹100 ஆக இருந்த பணம் ₹1000 ஆக பண புழக்கம் மூலம் தவறான வழியில் பெருகியது. அப்போது விலைவாசிகள் உயரும், பணவீக்கம் அதிகமாகும். அதிகமாகியது.

அப்படி பண புழக்கம் அதிகரித்ததால்  இந்தியாவின் பண வீக்கம் வரலாற்றில் முதன் முறையாக இரட்டை இலக்கத்தை தொட்டது. என்னதான் நாம் கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதை கட்டுப்படுத்தினாலும் பாகிஸ்தான் அடிக்கும் கள்ள நோட்டு ஒரிஜினல் தரத்தில் இருந்ததால், அதை நம்மால் தடுக்க இயலவில்லை.

அதனால் பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் அகதிகளுக்கு இந்திய பணத்தை கொடுத்து இந்திய ராணுவம் மீது தினந்தோறும் காஷ்மீரில் கல்வீச வைத்தது.  அது மட்டுமல்ல இந்திய அரசியல் ஆட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டு பணத்தை நேரடியாக புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதாரத்தின் ஆணியான ரிசர்வ் வங்கியையே ஆட்டம் காண செய்தது

அதை நிறுத்த வழி என்ன?

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ஆம், அது சரியே. பாகிஸ்தான் அரசை நாம் நோட்டுக்களை அச்சடிக்க முடியாமல் தடுக்க வேண்டும். அதை செய்ய உலக அரங்கில் இந்த விஷயத்தை எடுத்துச்செல்ல வேண்டும், ஆனால் அதை.செய்ய முடியாததிற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது.

முதலில் இந்தியா இந்த ரகசியத்தை வெளியில் சொன்னால் ரூபாயின் நம்பகத்தன்மையே கெட்டு விடும். இரண்டாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் Integrity கேள்விக்குறியாகி விடும். அப்படி நடந்தால் நாடே திவாலாகும் என்ற நிலை. அதற்கு மாற்று வழி, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது. இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்ததால் அந்த யோசனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனால், நம் அரசுக்கு பணம் மதிப்பு இழப்பு என்ற ஒரு வழியை தவிர வேறு வழியே இல்லை. இருந்தும் அது போன்ற முயற்சிகள் உலகத்தில் முன்பு முயற்சிக்கப்பட்டு  சில நாடுகளில் தோல்வி அடைந்தது. அதில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இந்தியாவிலும் ஒருமுறை முயற்சித்தும் தோல்வி கண்டது.

கரணம் தப்பினால் மரணம் என்ற மிகப்பெரிய ஒரு  ஆபரேசன் ஆகிய இந்த  Demonetization ஐ மோடி அரசு நாட்டின் நலன் கருதி, வெற்று அரசியலாக்காமல் துணிவாக எடுத்தது. இது வாஜ்பாயால் கூட முடியாது என்பது உண்மை. Demonetization க்கு பின்பு அரசு எதிர்பார்த்த பணத்தை விட அதிகமாக ரிசர்வ் வங்கிக்கு ₹1000, ₹500 நோட்டுக்கள் வந்தாலும், அதை மோடி அரசியலாக்க முடியாது ஏனென்றால் அது இந்திய RBI இன் integrity க்கும், இந்திய ரூபாயின் நம்பகத்தன்மைக்கும் கேடாக முடியும் என்பதால் மோடி ஒரு போதும் செய்யவில்லை.

அதனால் தான் அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்று இந்த உலகம் அவரை இன்று மதிக்கிறது. அது மட்டுமா, அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ், ஜப்பான் போன்ற பல நாடுகளும் இதை அறிந்ததால் பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறார்கள். அதை அறியாமல் முட்டாள்களாகிய நாம் ?!

பணமதிப்பு இழப்பு நடந்த உடனே  காஷ்மீரில் நடந்த கல்வீச்சு பாகிஸ்தான் மூலம் பணம் மதிப்பு இழப்பால் அந்த நாடு அடிக்கும் ₹500, ₹1000 நோட்டுக்கள் செல்லாததாக போனதால் சப்ளை நின்றது, கல்வீச்சும் அப்படியே குறைந்து பின் நின்றது.  அது மட்டுமல்ல பாகிஸ்தானின் பொருளாதாரமே வீழ்ந்தது. அதுதான் நமக்கு வெற்றியை கொடுக்க போகிறது. இப்போது சொல்லுங்கள் மோடி செய்த பண மதிப்ப்பிழப்பு சரியா? தவறா?

தவறு எனில் வேறு என்ன அதற்கு மாற்று மக்களிடம் உள்ளது  என்பதை சொல்லுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top