Close
நவம்பர் 21, 2024 9:14 மணி

எருமப்பட்டி பகுதியில் கிராமத்தில் உலாவும் காட்டெருமை : பொதுமக்கள் பீதி..!

ஊருக்குள் திரியும் காட்டெருமை

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் கிராமத்தில் உலாவரும் காட்டெருமையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியப் பகுதியில் கொல்லிமலை அடிவாரத்தில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. முட்டாஞ்செட்டி கிராமத்தினுள் நேற்று காலை ஒற்றைக் காட்டெருமை ஒன்று புகுந்தது.

அப்போது காட்டெருமை சென்ற பாதையில் இருந்த இரு ஆடுகளை முட்டி தூக்கி எறிந்ததில் இரு ஆடுகள் உயரிழந்தன. இதனிடையே காட்டெருமை கிராமத்தில் உலா வருதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையை முட்டாஞ்செட்டி கிராமத்தில் இருந்து அருகே உள்ள கொல்லிமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.

அப்போது அக்காட்டெருமை அருகே உள்ள எருமப்பட்டி, காவக்காரன்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட கிராமங்களினுள் புகுந்து வெளியேறி, மீண்டும் அதே கிராமத்திற்குள் நுழைந்து விவசாய தோடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். காட்டெருமையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் சரக வனத்துறையினர் கூறுகையில், கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் இருந்து காட்டெருமை வந்துள்ளது. அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top