Close
நவம்பர் 14, 2024 4:35 மணி

நாமக்கல்லில் ஷேர் ஆட்டோக்கள் திடீர் ஸ்டிரைக்: பொதுமக்கள் கடும் பாதிப்பு

பார்க் ரோட்டில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் ஷேர் ஆட்டோர் டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம்  கட்டப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதிய பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியில் தனியார் பாசஞ்சர் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஷேர் ஆட்டோக்களை பேருந்து நிலைய நுழைவு பகுதியில் நிறுத்தக் கூடாது என தனியார் பாசஞ்சர் ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து நாமக்கல் பார்க் ரோட்டில் உள்ள ஷேர் ஆட்டோ ஸ்டாண்டில், ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்காமல் நிறுத்தி வைத்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
நாமக்கல் நகரில் மொத்தம 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அதில் 18 ஆட்டோக்கள் சேலம் ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை நகருக்குள் ஏற்றி வர ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதற்கு கலெக்டர் மற்றும் போலீசார் அனுமதியளித்துள்ளனர். எனினும், தனியார் பாசஞ்சர் ஆட்டோ டிரைவர்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபடுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை ஷேர் ஆட்டோக்கள் இயக்காமல் நிறுத்தி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என அவர்கள் கூறினார்.

நாள் முழுவதும் இப்போராட்டம் நீடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top