Close
நவம்பர் 15, 2024 5:03 காலை

கள ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு திட்ட பணிகளை கள ஆய்வு செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 5 மற்றும் 6ம் தேதிகளில் அவர்  இந்த ஆய்வு பணிகளை தொடங்கினார். அதனை  தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில்  2 நாட்கள்  ஆய்வு பணி மேற்கொண்டார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்  நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கள ஆய்வு செய்து விட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமை புரம் என்ற இடத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் காலணி உற்பத்தி  தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கள ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் நாளை ‘(வியாழக்கிழமை) மாலை 5  மணி அளவி்ல் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top