ரஷ்யாவில் செக்ஸ் அமைச்சகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செக்ஸ்க்கு என்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறைந்துவரும் மக்கள்தொகை அதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு இருப்பதால் இந்த நடவடிக்கையை அதிபர் புடின் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் வாழ்ந்துவந்த ஏராளமான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் ரஷ்யா மட்டுமன்றி உக்ரைனிலும் மக்கள்தொகை கணிசமாக குறைந்துவருவதாக தெரியவந்துள்ளது. .
உலகில் வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு மக்கள் தொகை பெருக்கம் குறைந்துவருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின்படி ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாட்டில் மக்கள் தொகையை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதில் பாலியல் அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்யலாம் என்று சிலர் ஆலோசனை கூறியிருந்தனர். இந்த ஆலோசனையை ஏற்று செக்ஸ் விவகார அமைச்சகத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
மேலும் இதுபோல மக்கள் தொகையை அதிகரிப்பதற்கு வேறு எந்தெந்த வழிகளை கையாளலாம் என்பது பற்றியும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். அந்த ஆலோசனையில் நிபுணர்கள் பின்வரும் கருத்துக்களை ஆலோசனைகளாக வழங்கியுள்ளனர்.
பொதுமக்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தங்கள் வீடுகளில் இன்டர்நெட் உபயோகிக்காமல், வீடுகளில் விளக்குகளை அணைத்து விட்டு குழந்தைகளை உருவாக்க உடலுறவு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்னொரு ஆலோசனையில், வீட்டிலேயே தங்கி தங்களது குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதந்தோறும் இந்திய மதிப்பில் ரூ. 5000 வரை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது..
இதே போன்று திருமண ஜோடிகள் உடலுறவுக்காக ஹோட்டல்களில் அறைகளை எடுத்துக் கொள்ள அரசு பணம் ஒதுக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்திய மதிப்பில் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு தம்பதிக்கு வழங்கலாம் என்று ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று ரஷ்ய அமைச்சர்களும் உடலுறவை ஊக்கப்படுத்தும் விதமான கருத்துகளை கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை மிக வேகமாக பறக்கிறது என்று கூறியுள்ள அந்நாட்டு அமைச்சர் ஒருவர், மதிய உணவு, காபி இடைவேளைகளின்போது சந்ததிகளை உருவாக்க உடலுறவில் ஈடுபடலாம் என்று கூறி இருந்தார்.
இதேபோல மேலும் ரஷ்ய அரசு புதிய தம்பதிகளை கவரும்விதமான திட்டங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.