Close
நவம்பர் 15, 2024 3:29 மணி

மதுரை அவனியாபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

விழாவில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

மதுரை அவனியா புரத்தில், வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை,சமூக நல்லிணக்க கலைவிழா நடைபெற்றது.

வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அவனியாபுரம் மந்தை திடலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223-வது வீர வணக்கம் நாள் மாவிளக்கு ஊர்வலத்தில் கலந்து கொண் டவர்களுக்கு நினைவு பரிசும், அரசு பள்ளியில் படித்த பத்தாவது, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்
களுக்குகல்வி உதவித் தொகை வழங்கும் விழா, தாய்ப்பால் தானமாக வழங்கிய வீரமங்கைக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது.
விழாவில், மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல்,பகுதி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்
தொகை வழங்கினர்.

இதேபோல், பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்
களுக்கு அதிமுக மாநில பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கினர்.

மேலும், விழாவில் திருநெல்வேலி ஸ்ரீராம் கலைக் குழுவினரின் நாட்டிய மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வீரகுல அமரன் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மருது பாண்டியர்கள் நினைவு தினம் மற்றும் கல்வி உதவித்தொகை பரிசளிப்பு , சமுக ஒற்றுமை கலை விழாவில் அனைத்து கட்சி பிரமுகர்களும் அனைத்து சமூக தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில், கீ.ரா. முருகன் நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top