Close
நவம்பர் 15, 2024 5:41 மணி

மதிய உணவால் வயிற்றுவலி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை வழங்கியுள்ளனர்.

இதனை சாப்பிட்ட ஆறாம் வகுப்பு  மாணவர்கள் மதுமிதா, அபிநயா, லித்திகா, ஜமுனா, ஜெயகாந்தன், சிலம்பரசன், ஏழுமலை, ஹரிஹரன் ஆகிய 8 பேர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தனர்.

பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து வயிற்று வலியால் அவதிப்பட்ட 8 மாணவர்களை உடனடியாக மேல்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேல்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top