மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பக்தர்களால் மஞ்சள் பொடி, இளநீர், சந்தனம் போன்ற அவசிய பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி அலங்கரிக் கப்பட்டு , சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
மதுரை ஜெஜெ நகர் விநாயகர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை ஜெ ஜெநகரில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.