Close
நவம்பர் 21, 2024 10:57 காலை

திருச்சி கூட்டுறவு வார விழாவில் சிறந்த நிறுவனங்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் நேரு

திருச்சியில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் சிறந்த நிறுவனங்களுக்கு அமைச்சர் நேரு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் இன்று (19.11.2024) நடைபெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவ துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை
பார்வையிட்டு, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பரிசுகளையும  684 பயனாளிகளுக்கு ரூ.15.32 கோடி மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி விழா பேருரையாற்றினார்.

அப்போது அமைச்சர் நேரு பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துக்களுடன் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு, பெண்கள், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் நலிந்த பிரிவினரின் பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்களிப்பு எனும் தலைப்பில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக திருச்சி கலையரங்கம் திருமண
மண்டபத்தில் திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் பிறதுறை செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 703 கூட்டுறவு நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று திருச்சிராப்பள்ளியில்
நடைபெற்று கொண்டிருக்கும் இந்த 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில்
கலந்துகொண்டுள்ளீர்கள்.

கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே ஏழை, எளிய மக்களுக்கு
உதவும் வகையில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதாகும். தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான துறைதான் இந்த கூட்டுறவு துறை. இங்குள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும், உழைப்பும் மிக அவசியம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் 6,22,837 உறுப்பினர்கள்
உள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக
இந்த நிதியாண்டில் 1,38,427 நபர்களுக்கு ரூ.1025.85 கோடி அளவிற்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 16 கூட்டுறவு நிறுவனங்கள் 100 ஆண்டுகளை கடந்து மக்கள் சேவையினை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின்  நலனை கருத்தில்
கொண்டு வட்டி இல்லா கடன் வழங்கி வருகிறது. பயிர் கடன் வழங்குவதில் நடைமுறையினை
எளிதாக்கி விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2023,2024 ஆம் நிதியாண்டில் 70874 விவசாயிகளுக்கு 618.47 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 13,953 விவாயிகளுக்கு ரூ.69.92 கோடி கால்நடை பராமரிப்புக்கடன்
வழங்கப்பட்டுள்ளது. 1051 குழுக்களுக்கு 74.74 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. 162 நபர்களுக்கு ரூபாய் 84 இலட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 17 நபர்களுக்கு 13 இலட்சம் மதிப்பீட்டில் டாப்செட்கோ கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்காகவே பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய
உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கும், பொதுமக்களுக்குமான இணைப்பு பாலமாக விளங்குவது
கூட்டுறவு துறை தான், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிக்கும் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பங்களிப்பு
முக்கியமாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார்.

இன்று நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 517 நபர்களுக்கு ரூ. 5.12 கோடி
மதிப்பீட்டில் பயிர்கடன்களும், 60 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 4.95 கோடி மதிப்பீட்டில்கடனுதவிகளும், 15 நபர்களுக்கு ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் தாட்கோ கடனுதவிகளும், 13நபர்களுக்கு ரூ. 58 இலட்சம் மதிப்பீ்ட்டில் மகளிர் தொழில் முனைவோர்; கடனுதவியும், 18நபர்களுக்கு ரூ. 1.92 கோடி மதிப்பீட்டில் வீட்டு அடமானக் கடனுதவியும், 9 நபர்களுக்கு ரூ. 48.70 இலட்சம்  மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவியும், 5 நபர்களுக்கு ரூ.34.91 இலட்சம் மதிப்பீட்டில் சம்பளச்சான்று கடனுதவியும், 12 நபர்களுக்கு ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் வீட்டு
வசதி கடனுதவியும் 2 நபா;களுக்கு ரூ. 1.85 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி கடனுதவியும், 16நபர்களுக்கு ரூ.8.80 இலட்சம் மதிப்பீட்டில் சிறு வணிக கடனுதவியும், 2 நபர்களுக்கு ரூ. 1இலட்சம் மதிப்பீட்டில் நாட்டுப்புற கலைஞர் கடனுதவியும்,  3 நபர்களுக்கு ரூ. 1 இலட்சம் மதிப்பீட்டில் கைம்பெண்களுக்கான கடனுதவியும், 6 நபர்களுக்கு ரூ. 13.30 இலட்சம் மதிப்பீட்டில் மத்திய கால கடனுதவியும், 5 நபர்களுக்கு ரூ.; 34.90 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் வளா்ச்சி கடனுதவியும், 1 நபருக்கு ரூ. 1 இலட்ம்; மதிப்பீட்டில் டாப்செட்கோ கடனுதவியும் என மொத்தம் 684 நபர்களுக்கு ரூ.15.32 கோடி மதிப்பிலான கடனுதவிகளை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு தொடர்ந்து, கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறந்த கூட்டுறவு பணியாளர்களுக்கு பாராட்டு கேடயங்களையும் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட ;ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கி பாராட்டினார்.

முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கலையரங்கத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த
கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் 71 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்று வருவதையொட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்து சென்றார்.

இந்நிகழ்வில், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர; அன்பழகன், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மாநகராட்சி ஆணையர்
வே.சரவணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top