Close
டிசம்பர் 3, 2024 5:11 மணி

சோழவந்தான் பள்ளியில் மீண்டும் மின்சாரம்: மாணவர்கள் மகிழ்ச்சி, அதிகாரிகளுக்கு பாராட்டு

மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதிலும் உணவு தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் தண்ணீர் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வந்தது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் சார்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின் பேரில், வாடிப்பட்டி தொடக்கக் கல்வி அலுவலர் ஷாஜகான் பள்ளியை நேரில் ஆய்வு செய்து பள்ளி வகுப்பறை சமையலறை சுகாதார வளாகம் ஆகியவற்றிற்கு மின்சாரம் வழங்கவும் குடிநீர் உள்ள அடிப்படை வசதிகள் செய்து தரவும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இதனை அடுத்து, இன்று பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகள் மற்றும் சமையலறை சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் உறவின் முறையை சேர்ந்தவர்களுக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பாக தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top