Close
நவம்பர் 21, 2024 11:45 காலை

தஞ்சை அருகே பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை

கைது செய்யப்பட்ட மதன்குமார்.

தஞ்சை அருகே பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை அவரது காதலனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில்  அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தவர் ஆசிரியை ரமணி (வயது26). இவர் பட்டதாரி தமிழ் ஆசிரியை ஆவார்.

இன்று காலை இவர் வழக்கம் போல் தனது பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீர் என வகுப்பறைக்குள் நுழைந்த ஒரு இளைஞர் ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தினார். இதில் ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இந்த காட்சியை நேரில் பார்த்த அந்த வகுப்பில் இருந்த மாணவ மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த சக ஆசிரியர்கள் அங்கு ஒடி வந்து ரமணியை ஆம்புலன்சில் ஏற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்திவி்ட்டு தப்பி  ஓட முயன்ற அந்த இளைஞரை சக ஆசிரியர்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞரது பெயர் மதன்குமார் என்பதும் அவர் அருகில் உள்ள சின்னமனை என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை ரமணியை மதன்குமார் எதற்காக கொலை செய்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top