Close
டிசம்பர் 3, 2024 5:21 மணி

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிஐ க்கு மாற்றம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு (கோப்பு படம்)

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கினை சிபிஐ விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்  கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 67 பேர் உயிரிழந்தனர். இது தவிர பலர் கண் பார்வை இழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளச்சாராய சாவிற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் தமிழக அரசின் உத்தரவு படி சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தினர்.

ஆனால் கள்ளச்சாராய சாவிற்கு காரணமான போலீசார் மற்றும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் இந்த வழக்கில் தமிழக போலீசார் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டு இன்று தீர்ப்பளித்து உள்ளது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பினை வரவேற்று உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசு இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது என்று தான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top