Close
நவம்பர் 24, 2024 12:20 மணி

சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள்: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சேந்தமங்கலம் அருகே நடைபெற்று வரும், நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை, சேலம் கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் பல்வேறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூர் வழியாக காரவள்ளி செல்லும் ரோடு சிறப்பு பழுது பார்த்தல் பணி ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இப்பணியினை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்புப் பொறியாளர் சசிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பணிக்கான சுடுகலவையின் வெப்ப நிலை, ரோட்டின் கணம், ரோட்டின் மேல்தள சாய்வு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும். ஆய்வின் போது, ரோடு சீரமைப்பு பணிகளை, காலதாமதம் இல்லாமல் விரைவாக முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை க(ம)ப கோட்டப் பொறியாளர் திருகுணா, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவிப் பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top