Close
நவம்பர் 23, 2024 12:13 காலை

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ரூ.6 லட்சம் பயிர் கடன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு  மைய கூட்டரங்கில், நடைபெற்ற  விவசாயிகள் நலன்  காக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்   தலைமையில்  நடைபெற்றது.

இந்த  கூட்டத்தில் வேளாண்மைத்  துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்  கலைத்  துறை,   கூட்டுறவுத் துறை,  வருவாய்த் துறை,  ஊரக வளர்ச்சித்துறை,  பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 4,69,827/-மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,44,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், வேளாண்மை-உழவர் நலத்துறை 5  விவசாய பயனாளிகளுக்கு  ரூ.8,978/- மதிப்பிலான (பசுந்தாள் உர விதை, உளுந்து விதை) போன்ற வேளாண் இடுப்பொருட்களையும் மற்றும் 1 விவசாய பயனாளிக்கு இயற்கை விவசாய சான்றிதழ்களையும் மாவட்ட வருவாய் அலுவலர்  வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிக்கு பயிர் கடன் வழங்கப்பட்ட து.

இக்கூட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவு துறை மண்டல  இணை  பதிவாளர்  ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய  பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top