Close
நவம்பர் 23, 2024 3:07 காலை

திருச்சியில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் வழங்கப்பட்ட 1000 விலையில்லா ஹெல்மெட்கள்

லயன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜனுக்கு மாநகர காவல் ஆணையர் காமினி பேட்ஜ் அணிவித்தார்.

திருச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் துணிப்பை, மரக்கன்று, உயிர்காக்கும் தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.

தலைகவசம் உயிர்கவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள லயன்ஸ் சங்கங்கள் சார்பில் விலையில்லா 1000 தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் மாவட்ட ஆளுநர் லயன் ஏ.சவரிராஜ் தலைமையில் நடைபெற்றது

லயன் மணிவண்ணன், லயன் விஜயலட்சுமி சண்முக வடிவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லயன் எம்.நடராஜன் வரவேற்றார். பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ஆளுநரின் மாவட்ட செயல் திட்ட விலையில்லா 1001 தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி தொடங்கி வைத்தார்.

திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் எம்.ஏ.அலீம் சிறப்புரையாற்றினார். இதில் திருச்சி மாநகர துணை ஆணையர் செல்வகுமார், மாநகர காவல் துறை முன்னாள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் “பிளாஸ்டிக் தவிர்போம், துணி எடுப்போம்” என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி கே. கண்ணன் மரக்கன்றுகள் வழங்கினார்.

மேலும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் திட்ட ஒருங்கிணைப்பாளரும், திருச்சி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளருமான நடராஜன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top