Close
நவம்பர் 24, 2024 12:29 மணி

சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங் குன்றம்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமான அளவில் உள்ளது. முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்ய வருகை தந்த நிலையில் திருவிழா போல் காட்சி அளித்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் .
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு , விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும், கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து அவர்களது விரதத்தை தொடங்கினர்.
கர்நாடாக ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிகளவு பக்தர்கள் வருகை தந்ததால், திருப்பரங்குன்றத்தில் திருவிழா போல் காட்சி அளித்தது.
எங்கு திரும்பினாலும், மனித தலைகளாக  காட்சியளிக்கிறது

தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் சஷ்டி காலங்களில் தான் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும் . ஆனால், இம்முறை கார்த்திகை மாதமே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு, சுற்றுலாவாக அதிகளவு பக்தர்கள் வருகை தருவதால், திருப்பரங்குன்றத்தில் பார்க்கிங் வசதி குறைந்த அளவு உள்ளதாகவும், இதனால் ஆங்காங்கே வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து காவல்துறையினர் அபதாரம் கட்டணம் விதிப்பதாகவும் கூறப்படுகிறது

வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்தினாலும் சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , கழிப்பறை வசதிகள் குறைந்த அளவு உள்ளதாகவும்,  சுற்றுலா பக்தர்கள் கூறினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top