Close
நவம்பர் 25, 2024 3:30 மணி

நாமக்கல்லில் 9 பயனாளிகளுக்கு ரூ. 9.37 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 9.37 லட்சம் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 579 மனுக்களை கöக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 4.14 லட்சம் மதிப்பீட்டில் வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்புக் கடன், தொழிலாளர் நலத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், 1 நபருக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையாக ரூ. 5 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நலத்திட்ட உதுவிகளை வழங்கினார். மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ. 9.37 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரகாரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top