இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் கடந்த 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு தற்போது அவரின் பதவிகாலம் விரைவில் முடிவடைகிறது.
சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
மேலும் அவருக்கு அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அங்கு அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.