Close
நவம்பர் 26, 2024 5:36 மணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள் தூய்மைப் பணி தொடக்கம்

தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதி திருக்கோவில் கருவரையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆன்மீக பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சரதங்கள் சுவாமி வீதி உலா வரவுள்ள வாகனங்கள் அனைத்தையும் ஊழியர்கள் பழுது பார்த்தல் , வண்ணம் பூசுதல் ஆகிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ராஜகோபுரம் , அம்மணி அம்மன் கோபுரம் , பே கோபுரம் , திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட நவகோபுரங்களையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ராட்சத கிரேன் மூலம் தண்ணீர் பீச்சு அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலம் கோபுரங்களில் உள்ள சிறு சிறு செடிகளை அகற்றி புறா எச்சங்களை தூய்மைப்படுத்துகின்றனர். கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடா்ந்து, 2வது நாளாக நாளையும் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top